ஊட்டியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வை கண்டித்து ஊட்டியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-13 18:45 GMT

ஊட்டி,

தமிழகத்தில் மின் கட்டணம், கட்டுமான பொருட்கள், சொத்து வரி, பால் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊட்டி நகர அ.தி.மு.க. சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் ஊட்டி காபிஹவுஸ் ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது. இதற்கு நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டணம் உள்ளிட்ட விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அ.தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்