அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

சங்கராபுரத்தில் அ.தி.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-29 18:45 GMT

சங்கராபுரம், 

கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சங்கராபுரம் பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார், முன்னாள் எம்.பி.காமராஜ், கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைய தலைவர் ராஜசேகர், மூங்கில்துறைபட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் சன்னியாசி, நகர செயலாளர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். தமிழகத்தில் தொடரும் கள்ளச்சாராயம், ஊழல், முறைகேடுகள், சட்டம்- ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை கண்டித்து மாவட்ட செயலாளர் குமரகுரு கண்டன உரையாற்றினார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபு, அழகுவேல்பாபு, மாவட்ட நிர்வாகிகள் பச்சையப்பன். டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் தாமரைச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் ரவி, கதிர்தண்டபாணி, அருணகிரி, நகர செயலாளர்கள் பாபு, கருப்பன் நிர்வாகிகள் இளந்தேவன், ராஜேந்திரன், திருமால், ஜியாவுதீன், அண்ணாமலை, கார்த்திகேயன், சேகர், இளம்பரிதி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்