அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-12-10 18:45 GMT

தட்டார்மடம்:

பால் விலை, சொத்து வரி, மின்கட்டண உயர்வை கண்டித்து சாத்தான்குளம் பழைய பஸ்நிலையம் காமராஜர் சிலை முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார். ஒன்றிய செயலர் அச்சம்பாடு சவுந்திரபாண்டி, நகர செயலர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வர்த்தக பிரிவு செயலர் திருமணவேல், ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவ பாண்டியன், ஒன்றிய மாணவரணி செயலர் ஸ்டேன்லி, ஒன்றிய இளைஞரணி செயலர் பாலகிருஷ்ணன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலரும், புதுக்குளம் பஞ்சாயத்து தலைவருமான பாலமேனன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய தலைவர் சின்னத்துரை, ஒன்றிய துணை செயலர் சின்னத்துரை, மாவட்ட கவுன்சிலர் தேவவிண்ணரசி, ஒன்றியக்குழு துணை தலைவர் அப்பாத்துரை, புத்தன்தருவை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் முத்தராமலிங்கம், சொக்கன்குடியிருப்பு கூட்டுறவு கடன் சங்க தலைவர் பாண்டியராஜ், ஒன்றிய விவசாய அணி தலைவர் பால்துரை, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் காத்தீஸ்வரன், அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க செயலர் சுந்தரபாண்டி, நகர பொருளாளர் செல்வேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவைகுண்டத்தில் பழைய தாலுகா அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல் தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் கருப்பசாமி, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாநகராட்சி கவுன்சிலர் மந்திரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல தலைவர் எட்வர்டு அந்தோணிராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், கூட்டுறவு சங்கம் எஸ்.டி.டி.ரவி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்