அரசு பணியை செய்யவிடாமல் தடுத்த அ.தி.மு.க. நிர்வாகி மீது வழக்கு

அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக அ.தி.மு.க. நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-08-27 18:30 GMT

அறந்தாங்கி அருகே பாண்டிக்குடியை சேர்ந்தவர் குழந்தை செல்வன் (வயது 35). இவர் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் 7-வது வார்டு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராகவும், அ.தி.மு.க. திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இந்தநிலையில் இவர் மீது அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமங்கள்) சிவசாமி நேற்று அறந்தாங்கி போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில் அலுவலகத்தில் பணியில் இருந்த போது குழந்தை செல்வன் வந்து சாலை பணிகளை தனக்கு ஒதுக்க வேண்டும். இல்லையென்றால் டெண்டர் நடத்த விடாமல் செய்வேன். மேலும் ஒருமையில் பேசி அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக கூறியுள்ளார்.

இந்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்