அ.தி.மு.க. அவைத்தலைவர் பிரார்த்தனை
ஆத்தங்கரை பள்ளிவாசலில் அ.தி.மு.க. அவைத்தலைவர் பிரார்த்தனை செய்தார்.
திசையன்விளை:
அ.தி.மு.க. நிரந்தர அவைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்மகன் உசேன் நேற்று திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்காவிற்கு வந்தார். பின்பு அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார். தொடர்ந்து அங்கு இருந்த மக்களுக்கு நேர்ச்சை வினியோகம் செய்தார். முன்னதாக அவருக்கு, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.