அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
செங்கோட்டையில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டையில் உள்ள வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மகளிரணி துணை செயலாளா் முன்னாள் அமைச்சா் ராஜலட்சுமி, மாவட்ட துணை செயலாளா் பொய்கை சோ.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களிடம் புதிய வாக்காளர்களை சேர்ப்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. கடையநல்லுார், சங்கரன்கோவில், வாசுதேவநல்லுார் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய, பேரூர், நகர கழக செயலாளா்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனா்.