அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறப்பு
அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டது.
அரியலூரில் நகர அ.தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அருகில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. இதில் நகர செயலாளர் செந்தில் வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.
அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், பானகம், இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, தர்ப்பூசணி, இளநீர் ஆகியவற்றை வழங்கினார். இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர், நகர அம்மா பேரவை செயலாளர் கார்த்தி, கூட்டுறவு பால் சங்க தலைவர் கல்லங்குறிச்சி பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் அரியலூர் தொகுதிக்கு உட்பட்ட திருமானூர், கீழப்பழுவூர் பஸ் நிறுத்தங்களில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல்களை மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்தார்.