அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
நெல்லையில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. அமைப்புசாரா ஓட்டுனர் அணி சார்பில் நெல்லை சந்திப்பு தேவர் சிலை அருகே நீர்-மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து பொது மக்களுக்கு தண்ணீர், மோர், தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை தெற்கு பகுதி அ.தி.மு.க. செயலாளர் திருத்து சின்னத்துரை ஏற்பாட்டில் பாளையங்கோட்டை பஸ்நிலையம் அருகேயும், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரேயும் நீர், மோர் பந்தலை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார்.