அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல்

திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

Update: 2023-04-22 19:00 GMT


திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் ரிப்பன்வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குளிர்பானம் மற்றும் பழங்களை வழங்கினார். இதில் மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதிமுருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.டி.ராஜன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் திவான் பாட்ஷா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பழங்கள், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் போட்டிபோட்டு அள்ளிச்சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்