அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
பனவடலிசத்திரம்:
அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ. ஆலோசனைபடி மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் மானூர் வடக்கு ஒன்றிய பகுதிகளில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
இதில் ஜெயலலிதா பேரவை எஜமான் செந்தில்குமார், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அந்தோணி டேனியல், மூவிருந்தாளி மகாராஜாபாண்டியன், தெற்கு அச்சம்பட்டி கிளை செயலாளர் கார்த்திக் மற்றும் கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.