அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்

ஆலங்காயம் ஒன்றியத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2023-05-30 18:12 GMT

ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்தில் பள்ளிப்பட்டு, உதயேந்திரம், மேட்டுப்பாளையம், வளையாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை சிிறப்பு முகாம்கள் நடைபெற்றது. முகாமிற்கு ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளரும், வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கோ.செந்தில்குமார் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவங்களை நிர்வாகிகளுக்கு வழங்கி, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து விளக்கி கூறினார்.

தொடர்ந்து வருகின்ற 3-ந் தேதிக்குள் உறுப்பினர் படிவங்களை பூர்த்தி செய்து தர வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த சிறப்பு முகாமில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் என்.முனிசாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா கந்தன், உதயேந்திரம் பேரூராட்சி செயலாளர் சரவணன், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் எஸ்.பாரதிதாசன், மாவட்ட பிரதிநிதி கோவிந்தசாமி, சிவானந்தம், ராமசாமி, அவைத் தலைவர் என்.பரமசிவம், செல்வராஜ், வாணியம்பாடி நகர மன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜாகிர் அகமது, நவீன், பழனிச்சாமி, வளையாம் பட்டு ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி கவுண்டர், வரதன், அருள், முன்னாள் கவுன்சிலர் குமார், பெத்தவேப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி, ஜாப்ராபாத் வார்டு உறுப்பினர் ஜபியுல்லா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்