அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர்

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் முன்னிலையில், அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர்.

Update: 2022-12-27 20:41 GMT

இட்டமொழி:

நெல்லையில் உள்ள கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் முன்னிலையில், நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு ஏற்பாட்டில், மன்னார்புரம் அ.தி.மு.க. கிளைச்செயலாளர் சேவியர் மான்சிங் தலைமையில் தெற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் அந்தோணிவளன், தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளர் அந்தோணி பிரான்சிஸ், மன்னார்புரம் கிளை இளைஞரணி செயலாளர் மைக்கேல் ஜான்சன் உள்பட 50 பேர் அ.தி.மு.க. வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் இரா.ஆ.பிரபாகரன், மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின்ஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னத்துரை உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்