அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தில் மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்டம் சார்பில் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆலோசனையின் பேரில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்குச்சாவடி முகவர்களை தயார்படுத்தும் விதமாக கட்சி நிர்வாகிகளிடையே ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை சார்ந்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 295 வாக்குச்சாவடிகளுக்கு தலா 20 பேர் வீதம் கட்சி நிர்வாகிகள் 5,900 பேர் வாக்குச்சாவடி முகவர்கள் தயார்படுத்தி வருகின்றனர். இதுதவிர இளைஞர், இளம்பெண் பாசறையில் 50 பெண்கள் மற்றும் 50 இளைஞர்கள் கொண்ட முகவர்கள் தயார்படுத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.