அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர அ.தி.மு.க. செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், கருப்பசாமி, கழுகுமலை பேரூராட்சி செயலாளர் முத்துராஜ், எட்டயபுரம் பேரூராட்சி செயலாளர் ராஜகுமார், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.