அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Update: 2023-07-16 18:45 GMT

திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும், அமைப்புச்செயலாளருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைப்புச்செயலாளர் சிவா.ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராமன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் பாப்பா சுப்பிரமணியன், மணிகண்டன், தமிழ்ச்செல்வன், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடிப்பது. மதுரையில் நடைபெறும் கட்சியின் மாநாட்டில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து ஏராளமான தொண்டர்கள் கலந்து கொள்வது. திருவாரூரில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் விலைவாசி உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்