திருச்சி கோர்ட்டில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆஜர்
திருச்சி கோர்ட்டில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆஜர் ஆனார்கள்
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே கடந்த ஜூன்மாதம் 27-ந் தேதி விலைவாசி உயர்வு மற்றும் தி.மு.க. அரசை கண்டித்து மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போலீசாரின் தடையை மீறி, போக்குவரத்துக்கு இடையூறாக ஆாப்பாட்டம் நடத்தியதாக கோட்டை போலீசார் அ.தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் கோர்ட்டில் ஆஜராகினர். இதையடுத்து வழக்கை வருகிற பிப்ரவரிமாதம் 6-ந் தேதி ஒத்திவைத்து மாஜிஸ்திரேட்டு சுபாஷினி உத்தரவிட்டார்.