ஆய்க்குடியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

ஆய்க்குடியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-12-09 18:45 GMT

கடையநல்லூர்:

தி.மு.க. அரசின் தொடர் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஆய்க்குடி பேரூராட்சியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் முத்துக்குட்டி தலைமை தாங்கினார், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன் முன்னிலை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்