ஆலங்குளத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

அ.தி.மு.க. பொதுக்கூட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது.

Update: 2023-09-16 19:15 GMT

ஆலங்குளம், 

ஆலங்குளம் டி.என்.சி. முக்குரோட்டில் அண்ணா பிறந்த நாள் விழாவையொட்டி அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், ஆலங்குளம் கவுன்சிலர் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பிரமணியன், விருதுநகர் கிழக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜு, ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் நல்ல கணேஷ்ராம், ஆலங்குளம் ரமேஷ், ஆலங்குளம் கிளை செயலாளர் ரவி, வசந்த் நகர் கிளைசெயலாளர் யுவராஜ், எதிர்கோட்டை கிளை செயலாளர் விக்னேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் திரைப்பட இயக்குனர் சக்தி சிதம்பரம் சிறப்புரையாற்றினார். 

Tags:    

மேலும் செய்திகள்