முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பிரமுகர் கைது
அன்னூரில் முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
அன்னூர்
அன்னூர் பகுதியை சேர்ந்த 35 வயது பெண் தனது 2 குழந்தைகளு டன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கும், பொத்திபாளை யத்தை சேர்ந்த அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செல்வராஜ் என்ற கோல்டு செல்வம் (வயது 48) என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இதனால் கோல்டு செல்வத்துக்கும், அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்தது வந்தது.இந்த நிலையில் கோல்டு செல்வம் மதுபோதையில் அந்த பெண் ணின் வீட்டிற்கு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த பெண் ணின் தந்தையான 60 வயது முதியவரை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோல்டு செல்வத்தை கைது செய்தனர்.