மரங்களை வெட்டி கடத்திய அ.தி.மு.க. பிரமுகர் கைது-2 மாதங்களுக்கு பிறகு சிக்கினார்

காட்டாம்பூண்டி வனப்பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பிலான மரங்களை வெட்டிக்கடத்திய வழக்கில் தலைமறைவான அ.தி.மு.க.பிரமுகர் 2 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-30 17:39 GMT

வாணாபுரம்

காட்டாம்பூண்டி வனப்பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பிலான மரங்களை வெட்டிக்கடத்திய வழக்கில் தலைமறைவான அ.தி.மு.க.பிரமுகர் 2 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

மரக்கன்றுகள்

திருவண்ணாமலை மாவட்டம் காட்டாம்பூண்டி கிராமத்தில் உள்ள 100 ஏக்கர் வனப்பகுதியில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கால நிலைக்கு ஏற்ப வளரும் மரங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து அந்த மரக்கன்றுகள் வளர்க்கப்படும் என வனத்துறை தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 100 ஏக்கர் வனப்பகுதியில் உள்ள புதர்கள் மற்றும் காய்ந்த மரங்கள் செடி, கொடிகள் உள்ளிட்டவைகளை அகற்ற காட்டாம்பூண்டியில் வசிக்கும் அ.தி.மு.க. பிரமுகர் அன்பரசு என்பவர் ஒப்பந்தம் பெற்றிருந்தார்.

இதனையடுத்து வனப்பகுதியில் இருந்த பழமையான மரங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.50 லட்சம் என கூறப்படுகிறது.

அ.தி.மு.க.பிரமுகர் கைது

இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் மற்றும் திருவண்ணாமலை வனத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொக்லைன் எந்திர டிரைவரான விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பொன்னியந்தல் பகுதியை சேர்ந்த அசோக் (வயது 24) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ஆனால் அ.தி.மு.க.பிரமுகர் அன்பரசு தலைமறைவானார். வனத்துறை அதிகாரிகள் மற்றும் தச்சம்பட்டு போலீசார் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கைது செய்ய முடியவில்லை.

இதனிடையே மரங்களை வெட்டி கடத்தப்பட்டதை கண்காணித்து தடுக்க தவறியதாக வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக திருவண்ணாமலை வனக்காப்பாளர் சுல்தான் சமீபத்தில் பணியிைட நீக்கம் செய்யப்பட்டிருந்தார். மேலும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என 3 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அன்பரசு சென்னையில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. வனத்தறையினர் அங்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மனைவி ஊராட்சி தலைவர்

கைதான அ.தி.மு.க. பிரமுகர் அன்பரசுவின் மனைவி தற்போது ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்