அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா

உளுந்தூர்பேட்டை பகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா நடந்தது.

Update: 2023-05-12 18:45 GMT

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் விழா, உளுந்தூர்பேட்டை பஸ்நிலையம் அருகே கொண்டாடப்பட்டது. இதற்கு கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி, அங்கு இருந்த பிரமாண்ட கேக்கை வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் மணிராஜ், நகர செயலாளர் துரை, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாய்ராம், விநாயகா கல்வி குழும தலைவர் நமச்சிவாயம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை செயலாளர் திலீப், ஒன்றிய துணைச்செயலாளர் வக்கீல் ஆறுமுகம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணன், கட்சி நிர்வாகிகள் வெங்கடேசன், ராமசாமி, கோபால், ஐ.டி.விங் நகர செயலாளர் சாய்அருண் உள்பட பலர்கலந்து கொண்டனர். இதேபோன்று, மடப்பட்டு கூட்டு ரோட்டில் நடந்த பிறந்த நாள் விழாவில் மாவட்ட செயலாளர் குமரகுரு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில், திருநாவலூர் ஒன்றிய செயலாளர் செண்பகவேல், மடப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜனார்த்தனன், பொதுக்குழு உறுப்பினர் மணி, ஒன்றிய நிர்வாகிகள் காப்பு கலக்கல் தங்கம், எழிலரசன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

மேலும், அரசூர் கூட்டு ரோட்டில் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் குமரகுரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய நிர்வாகி சின்னசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்