அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

செங்குளத்தில் அ.தி.மு.க. சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-01-26 22:05 GMT

முக்கூடல்:

பாப்பாக்குடி ஒன்றியம் செங்குளத்தில் அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சண்முகசுந்தரம், இணைச்செயலாளர் முத்துலெட்சுமி, பொருளாளர் சாமிநாதபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி செயலாளர் தளபதி பிரேம்குமார் வரவேற்றார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன், பேச்சாளர்கள் இசைமுரசு ராமகிருஷ்ணன், சவுண்டு சரவணன் ஆகியோர் பேசினார்கள். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முக்கூடல் நகர செயலாளர் வில்சன், மாணவரணி நிர்வாகிகள் அருணாச்சலம், ஹரிவிஷ்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர். பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்