அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
திருக்கடையூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது
அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருக்கடையூர் சன்னதி வீதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் பி.வி.பாரதி தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் சக்தி, மாவட்ட துணை செயலாளர் செல்லையன், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் ஆசைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செம்பனார் கோவில் ஒன்றிய செயலாளர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. ஏழை-எளிய மக்கள் முன்னேற்றத்திற்காக பல நலத்திட்டங்களை கொண்டு வந்தது, அ.தி.மு.க.தான் என்று பேசினார். அதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் மூத்த முன்னோடிகள் 26 பேருக்கு சால்வை மற்றும் சந்தன மாலை அணிவித்து நினைவு கேடயம் மற்றும் ரூ.5 ஆயிரம் வழங்கினார். இதில் செம்பனார்கோவில்(வடக்கு) ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனன், மருதம்பள்ளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி.என்.செங்குட்டுவன், திருக்கடையூர் ஊராட்சி செயலாளர் சங்கர், இளைஞர்-இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் சந்துரு பிரபு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குமார் நன்றி கூறினார்.