அ.தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம்
சோளிங்கரில் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி மற்றும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அணிக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எல்.விஜயன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் எம்.ராமு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாவட்ட அவைத்தலைவருமான ஜி.சம்பத் கலந்துகொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என்றார்.
இதில் ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.