மின் கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மின்கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2022-12-13 19:13 GMT

மின்கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் சொத்துவரி, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி, நகராட்சிகளில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாநகராட்சி பகுதியில் தச்சநல்லூர், டவுன், மேலப்பாளையம், வண்ணார்பேட்டை ஆகிய 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லை வண்ணார்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஜெரால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தச்சநல்லூர்-டவுன்

தச்சநல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். முன்னாள் துணைமேயர் ஜெகநாதன் என்ற கணேசன், இளைஞர் அணி இணைச்செயலாளர் ஸ்ரீவை. சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை டவுனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்து பேசினார்.

மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமை தாங்கி, தொடங்கி வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டிபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

களக்காடு-அம்பை

களக்காட்டில் நகர அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயணபெருமாள், மாவட்ட இளைஞரணி செயலாளர் பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்பை கல்யாணி தியேட்டர் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அமைப்பு செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் ஏ.கே.சீனிவாசன் முன்னிலை வகித்தார். அம்பை நகர செயலாளர் அறிவழகன் வரவேற்றார். மன்னார்கோவில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சண்முகவேல், ஒன்றிய துணைச் செயலாளர் பிராங்கிளின், மாநில பேச்சாளர் மின்னல் மீனாட்சி ஆகியோர் உரையாற்றினார்.

இதில் மணிமுத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன்பாபு, நகராட்சி கவுன்சிலர்கள் மாரிமுத்து, சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், கல்லிடைக்குறிச்சி நகர செயலாளர் முத்துகிருஷ்ணன், அடைய கருங்குளம் பஞ்சாயத்து துணை தலைவர் மதன கிருஷ்ணன், வக்கீல்கள் செல்வந்தோணி, சுரேஷ், நகர துணை செயலாளர் மதன், மாவட்ட பிரதிநிதி சுடலை, பொதுக்குழு உறுப்பினர் பார்வதி பாக்கியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விக்கிரமசிங்கபுரம்

விக்கிரமசிங்கபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. முருகையா பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன், பொதுக்குழு உறுப்பினர் செவல் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கண்ணன் வரவேற்றார்.

அம்பை ஒன்றிய செயலாளர் விஜய பாலாஜி, அ.தி.மு.க. மாவட்ட கலை இலக்கிய செயலாளர் கூனியூர் மாடசாமி, திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி, மதுரா கோட்ஸ் அண்ணா தொழிற்சங்க செயலாளர் கைக்கண்டார், மாவட்ட முன்னாள் திட்டக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், முன்னாள் நகராட்சி துணை தலைவர் கணேச பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்