தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-13 16:16 GMT

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் செய்யாறு அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போட்ட தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், மாவட்ட நிர்வாகிகள் டி.கே.பி.மணி, ஏ.கோவிந்தராஜ், டி.பி.துரை, விமலாமகேந்திரன், அருணகிரி, ரவிச்சந்திரன், நகர செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் எம்.மகேந்திரன், அரங்கநாதன், வே.குணசிலன், சி.துரை, நகர அவைத்தலைவர் ஜனார்த்தனன் உள்பட 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்