விஷம் குடித்துவிட்டு போலீஸ் நிலையத்துக்கு வந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சாவு

விஷம் குடித்துவிட்டு போலீஸ் நிலையத்துக்கு வந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2022-11-22 20:45 GMT

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது 54) விவசாயி. அ.தி.மு.க. முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர். இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். 3 பேரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். சொத்து சம்பந்தமாக குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜயன் கடந்த 16-ந்தேதி விஷம் குடித்துவிட்டு, விஷப்பாட்டிலுடன் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தார். அப்போது போலீஸ் நிலைய வளாகத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அவரிடம் விசாரித்துள்ளனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

அப்போது அவர் குடும்ப பிரச்சினை மற்றும் கடனாக கொடுத்த பணம் திருப்பி வராத விரக்தியில் விஷம் குடித்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி விஜயன் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சூரி (28) கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்