அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
செங்கோட்டையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
செங்கோட்டை:
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பூத் கமிட்டி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழுக்கள் அமைப்பது தொடர்பான தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் நடந்தது.
வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தலைமை கழக பேச்சாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.