அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் சிறப்புரையாற்றி பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமசந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம், தொடங்கி தேர்தல் நேரங்களில் விழிப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும், அந்த நேரத்தில் பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் விரிவான ஆலோசனைகளை வழங்கினார். தேர்தலில் வெற்றி எனும் இலக்கை அடைய நிர்வாகிகளும், தொண்டர்களும் இரவு பகல் பார்க்காமல் அயராது உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஷாபுதீன், மாவட்ட பேரவை செயலாளர் பூண்டி பிரகாஷ், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் சேதுராமன், நகர செயலாளர் வேதகிரி, முன்னாள் நகர செயலாளர்கள் சேகர், மணி, நகர அவைத்தலைவர் குமரன், மாவட்ட பிரதிநிதி அஸ்லாம்கான், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நகர செயலாளர் முஹம்மது உமர் பரூக், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் எழிலரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.