பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
மாதகடப்பா மலைப்பகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
வாணியம்பாடி தொகுதி, ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் மாதகடப்பா மலை, சிந்தகமாணிபெண்டா உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் தனித்தனியாக நடைபெற்றது. கூட்டத்திற்கு வாணியம்பாடி தொகுதி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு புத்தகங்கள் வழங்கி, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நிர்வாகிகள் எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து விளக்கினார். நாடாளுமன்ற தேர்தலில் நாம் ஒற்றுமையோடு செயல்பட்டு வெற்றி பெற அயராமல் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் கோபால், என்.பரமசிவம், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பாரதிதாசன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் குமார், கோவிந்தசாமி, செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.