அ.தி.மு.க. சார்பில் பால்குட ஊர்வலம்

அ.தி.மு.க. சார்பில் பால்குட ஊர்வலம் நடந்தது.

Update: 2022-08-14 19:45 GMT

நெல்லை டவுனில் அ.தி.மு.க. சார்பில் பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதற்கும், விரைவில் அவரது தலைமையில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டியும் இந்த ஊர்வலம் நடைபெற்றது.

டவுன் மேற்கு ரதவீதியில் உள்ள மடத்தில் இருந்து 101 பெண்கள் பால்குடங்களுடன் புறப்பட்டு சந்திப்பிள்ளையார் கோவிலில் வழிபாடு நடத்தி ரதவீதிகளில் வலம் வந்து நெல்லையப்பர் கோவிலை வந்தடைந்தனர். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். நெல்லை பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் சீனிமுகமது சேட் வரவேற்றார்.

இதில் திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சிராணி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் பெரியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்