அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
செங்கோட்டையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
செங்கோட்டை:
தமிழக அரசின் வீட்டுவரி உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து கடையநல்லூரில் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பாக செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு வடக்கு செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கினார். மகளிரணி துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.எம்.ராஜலட்சுமி, மாவட்ட அவைத்தலைவர் வி.பி.மூர்த்தி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.