அ.தி.மு.க. நிர்வாகி-2-வது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை

அ.தி.மு.க. நிர்வாகி-2-வது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-27 23:00 GMT

மணப்பாறை:

ஆள்மாறாட்டம் செய்து மோசடி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த போடுவார்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 60). அ.தி.மு.க. நிர்வாகியான இவருக்கும் மணப்பாறையை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையும், மாற்றுத் திறனாளியுமான நிர்மலா தேவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்று ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நிர்மலாதேவி என்ற பெயரையுடைய மற்றொரு பெண்ணை சந்திரசேகர் இரண்டாவது திருமணம் செய்தார்.

இதையடுத்து கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதல் மனைவியான நிர்மலா தேவி தன்னுடைய மகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நிர்மலா தேவியின் பெயரில் மணப்பாறையில் இருந்த இடத்தை, தனது இரண்டாவது மனைவியின் பெயரும் நிர்மலா தேவி என்பதால் ஆள்மாறாட்டம் செய்து தன்னுடைய பெயருக்கு சந்திரசேகர் மாற்றிப்பதிவு செய்தார்.

3 ஆண்டுகள் சிறை

இந்த மோசடி குறித்து தகவல் அறிந்த முதல் மனைவி நிர்மலா தேவி, மணப்பாறை போலீசில் புகார் அளித்ததோடு, மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். இதையடுத்து சந்திரசேகர் மற்றும் அவரது 2-வது மனைவி நிர்மலா தேவி உள்ளிட்ட 4 பேர் மீதான இந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 2 பேர் விடுதலை ஆன நிலையில், இருபிரிவுகளின் கீழ் உள்ள வழக்கில் சந்திரசேகர் மற்றும் அவரது இரண்டாவது மனைவி நிர்மலா தேவி ஆகிய இருவருக்கும் இரண்டு பிரிவுகளுக்கும் தலா 3 ஆண்டுகள் வீதம் சிறை தண்டனை வழங்கி, அதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்