எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைய ஈரோடு தர்காவில் தமிழ் மகன் உசேன் சிறப்பு தொழுகை

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டி ஈரோடு தர்காவில் தமிழ் மகன் உசேன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டார்.

Update: 2022-08-21 21:31 GMT

ஈரோடு, ஆக.22-

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டி ஈரோடு தர்காவில் தமிழ் மகன் உசேன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டார்.

சிறப்பு தொழுகை

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை பகுதியில் ஹஜ்ரத் ஷேக் அலாவுதின் பாதுஷா அவுலியா தர்கா உள்ளது. இந்த தர்காவில் தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவர் தமிழ் மகன் உசேன் நேற்று மதியம் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டார். பின்னர், தொழுகை முடிந்து, வெளியே வந்த தமிழ் மகன் உசேன் நிருபர்களுக்கு போட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைவதற்காக நாடு முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற 75 தர்காக்களுக்கு சென்று சிறப்பு தொழுகை நடத்திட முடிவு செய்தேன். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் ஆத்தங்கரையில் உள்ள ஷேக் முஸ்தபா, சையது அலி பாத்திமா தர்காவில் இருந்து எனது பயணத்தை தொடங்கினேன்.

75-வது தர்கா...

இன்று (அதாவது நேற்று) 13-வது தர்காவாக, ஈரோடு கருங்கல்பாளையம் தர்காவிற்கு வந்துள்ளேன். 75-வது தர்காவாக ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவில் எனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தொழுகையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து, பெரியார் நகர் பகுதி செயலாளர் மனோகரன், முன்னாள் கவுன்சிலர் காவிரி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்