அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா
சுரண்டையில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது
சுரண்டை:
சுரண்டை நகர அ.தி.மு.க. சார்பில், 51-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சுரண்டை நகர அ.தி.மு.க. செயலாளர் வி.கே.எஸ்.சக்திவேல் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் சிவசங்கர், தேனம்மாள் தங்கராஜ், சங்கர், கோட்டூர் சாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரண்டை நகராட்சி வார்டு கவுன்சிலர் வசந்தன் வரவேற்றார். நகர செயலாளர் சக்திவேல் சுரண்டை எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, கட்சி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.