விஜயதசமியையொட்டி பள்ளியில் மாணவர் சேர்க்கை
விஜயதசமியை முன்னிட்டு பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
காரைக்குடி
காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் சர்வதேச பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அப்போது மாணவர்கள் அனைவரும் நெல்மணிகளில் தமிழ் எழுத்தான 'அ' என எழுதி பள்ளி படிப்பை தொடங்கினர். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் சத்தியன் தலைமை தாங்கினார். பள்ளியின் கல்வி இயக்குனர் டாக்டர் ராஜேஸ்வரி, பள்ளியின் முதல்வர் சங்கரசுப்பிரமணியன், துணை முதல்வர் சுபாஷினி மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.