தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கை தொடங்கியது கலெக்டர் தகவல்

நாகர்கோவில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கை தொடங்கியது

Update: 2022-06-25 20:13 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில் எஸ்.எம்.ஆர்.வி. அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022-ம் ஆண்டு மாணவிகள் சேர்க்கை ஆன்லைன் (www.skilltraining.tn.gov.in) மூலம் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்த சேர்க்கை பணிக்கு அடுத்த மாதம் 20-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி (ஆடை தயாரித்தல் தொழிற்பிரிவு மட்டும்) மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் குறைந்தபட்ச வயது வரம்பு 15 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

தகுதிவாய்ந்த மாணவிகள் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளான கம்மியர் மின்னணுவியல், டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆபரேட்டர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராம் அசிஸ்டெண்ட், ஆடை தயாரித்தல் (எட்டாம் வகுப்பு தேர்ச்சி), சுருக்கெழுத்து (ஆங்கிலம்), நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம், மருத்துவ மின்னணுவியல் நுட்பவியலாளர் ஆகிய தொழிற்பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம்.

பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் ஏற்பாடு செய்து தரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்