முதுகலை கல்வி ஆண்டுக்கான விண்ணப்பம்

காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரியில் முதுகலை கல்விக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2022-09-12 17:50 GMT

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி முதல்வர் பெத்தாலட்சுமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது-

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கான முதுகலை படிப்புகளான எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், எம்.காம்., மற்றும் முதுநிலை அறிவியல் படிப்புகளான எம்.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், புவி அமைப்பியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு வருகிற 16-ந்தேதி வரை www.tngasapg.in என்ற இணையதளத்தின் மூலமாக மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்