டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாணவிகள் சேர்க்கை

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

Update: 2022-06-30 15:58 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது.

ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு 2 ஆண்டு தொடக்க கல்வி பட்டயப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது.

இதில் சேர விரும்பும் மாணவிகள் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று 45 சதவீத மதிப்பெண்கள் (540/1200 அல்லது 270/600) பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று 50 சதவீத மதிப்பெண்கள் (600/1200 அல்லது 300/600) பெற்றிருக்க வேண்டும்.

பிளஸ்-2 தேர்வில் கணிதம், அறிவியல், கலை மற்றும் தொழிற்கல்வி போன்ற அனைத்து பிரிவைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள்31-7-2022 அன்று 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 35 வயதிற்கு மிகாமலும், ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்டோர், கைம்பெண்கள் 40 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

கலப்பின தம்பதியரில் பொது, பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் இனம் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதிற்கு மிகாமலும், கலப்பின தம்பதியரில் ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினர் 37 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

பணி நியமனத்தில் முன்னுரிமை

தற்போது அரசு பள்ளியில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு பாடம் எடுக்க 5 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) படித்த மாணவிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ெதரிவித்துள்ளது.

ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு படித்த இடைநிலை ஆசிரியர்களின் காலிப்பணியிடங்கள் தற்காலிகமாக பள்ளி மேலாண்ைம குழுவின் வாயிலாக நிரப்பப்பட உள்ளன. இத்தொடக்கக்கல்வி பட்டயபடிப்பு (D.T.Ed) கல்வி தகுதியுடன் ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தேர்ச்சி பெற்றவர்களுக்கு இத்தொடக்கக்கல்வி பட்டயப்படிப்புடன் இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கும், இத்தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு முடித்த மாணவிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ெதரிவித்து உள்ளது.

மேலும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு வந்து செல்ல பேருந்து வசதியும் உண்டு. அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணம் பெறப்படுகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவிகளுக்கு கல்விக்கட்டணம் கிடையாது. அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் இப்பட்டயபடிப்பு படிக்கும் மாணவிகளுக்கு அரசு கல்வி உதவித்தொகை ரூ.1000 பெற்று தரப்படும். இந்த நிறுவனத்தில் படித்த மாணவர்கள் பலர் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

மாணவிகள் சேர்க்கை

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சேர விரும்பும் மாணவிகள் www.drsatti.com என்ற இணையதளத்தில் apply now வழியாக விண்ணப்பிக்கலாம். அதனுடன் புகைப்படம், மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றை ஸ்கேன் செய்து இணைத்து அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 9486714314, 04639-220560, 220561 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது நிறுவன முதல்வரை ேநரிலோ தொடர்பு கொள்ளலாம் என்று டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்