அப்பல்லோ ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி: இன்று வீடு திரும்புகிறார்

முதல்-அமைச்சர் மு.க .ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் வீடு திரும்புகிறார்.

Update: 2023-07-04 00:30 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தனது கொளத்தூர் தொகுதியிலும் அவர் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. மேலும், வழக்கமான மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டியது இருந்தது. எனவே அவர் நேற்று மாலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று 'டிஸ்சார்ஜ்'

இந்த நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியின் மருத்துவ சேவைகள் இயக்குனர் டாக்டர் வெங்கடாசலம் நேற்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து இன்று அவர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்