டேராடூன் ராணுவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை-நெல்லை கலெக்டர் தகவல்
டேராடூன் ராணுவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.
டேராடூன் ராணுவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.
தகுதி தேர்வு
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இந்திய தேசிய ராணுவ கல்லூரியில் சேர்ந்து படிக்க தகுதி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த தகுதி தேர்வில் பங்கேற்க விரும்பும் ஆண் மற்றும் பெண் சிறார்கள் குறைந்தபட்சம் 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பவர்களாகவோ அல்லது 7-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களாகவோ இருக்க வேண்டும். வயது வரம்பு வருகிற 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி 11½ வயது நிரம்பியவராக அல்லது 13 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2.7.2010 முதல் 1.1.2012 தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
ஆங்கிலம், கணிதம், பொது அறிவு போன்ற பாடங்களில் தகுதி தேர்வு நடத்தப்படும். இந்த தகுதி தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 3-ந்தேதி நடைபெறும். எழுத்து தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு மட்டும் பின்னர் நேர்முக தேர்வு நடைபெறும்.
கடைசிநாள்
விண்ணப்பங்களை பெறுவதற்கு பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.600-க்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்கள் ரூ.555-க்கும் வங்கி வரைவோலை பெற்று அனுப்பி வைக்க வேண்டும்.
The Commandant RIMC, Dehradun, Drawee Branch, State Bank of India, Tell Bhavan, Dehradun, (Bank code -01576) Uttarkhand என்ற பெயரில் வங்கி வரைவோலை எடுத்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 15-ந் தேதிக்குள் (சனிக்கிழமை) சென்றடைய வேண்டும். இதுதொடர்பான விவரங்களுக்கு www.rimc.gov.in என்ற ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியின் இணையதள முகவரியில் பார்க்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ள மாணவர்கள் விண்ணப்பித்து பயன் அடையலாம்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.