பசுபதி பாண்டியன் கொலை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு விசாரணையை தள்ளிவைத்து திண்டுக்கல் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-07-29 14:52 GMT

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவராக இருந்தவர் பசுபதி பாண்டியன். இவர், திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டியில் வசித்து வந்தார். இந்தநிலையில் இவர் கடந்த 2012-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய முத்துப்பாண்டியன், நிர்மலா, ஆறுமுகசாமி, புறா மாடசாமி, பாட்சா என்ற மாடசாமி ஆகிய 5 பேர் கொலை செய்யப்பட்டு விட்டனர். இதற்கிடையே பசுபதிபாண்டியன் கொலை வழக்கு, திண்டுக்கல் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கேரள மாநிலம் திருச்சூர் சிறையில் இருக்கும் அருளானந்தம் மட்டும் காணொலிக்காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். மற்றவர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 26-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஜான்மினோ உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்