பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதை ஆசிரியர் சங்கம் வரவேற்றுள்ளது

Update: 2023-05-21 18:45 GMT

கொள்ளிடம்:

தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்வி துறையில் ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. இதனால் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயன் அடைந்து உள்ளனர். மேலும்திட்டமிட்டபடி இன்று (திங்கட்கிழமை) பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற இருந்தது. இந்த கலந்தாய்வை கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணி நிரவல் செய்ய இருந்தனர். இதனால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கபட கூடிய சூழ்நிலை ஏற்பட்டு இருந்தது. இதனை உடனடியாக கைவிட வேண்டும் என்று மாநில தலைவர் தியாகராஜன் தமிழக முதல்- அமைச்சர் மற்றும் பள்ளி கல்வி துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு கோரிக்கை வைத்து இருந்தார். இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) நடக்கஇருந்த பணி நிரசல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகன்,மாவட்ட செயலாளர் ஞானபுகழேந்தி, மாவட்ட பொருளாளர் மகேஷ் ஆகியோர் தமிழ்நாடு முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்