ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறஇந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாம்
ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2022-23-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவி தொகை பெறுவதற்கு வசதியாக ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம். இந்த வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் பள்ளிக்கூடங்களிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் அருகில் உள்ள தபால் நிலையம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன், பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணாக்கர்களின் ஆதார், செல்போன் எண்ணை பயன்படுத்தி விரல் ரேகை மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.