பள்ளி-கல்லூரி விடுதிகளை ஆதிதிராவிடர் நல ஆணையர் ஆய்வு
பள்ளி-கல்லூரி விடுதிகளை ஆதிதிராவிடர் நல ஆணையர் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவர் மற்றும் மாணவியர் விடுதி மற்றும் பெரம்பலூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆதிதிராவிடர் நல ஆணையர் மதுமதி, கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவுடன் நேரில் சென்ற பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விடுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு உணவு தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள பொருட்களின் தரம் குறித்தும், அரசால் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொருட்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் பார்வையிட்ட ஆணையர், அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விடுதிகளில் மாலை நேரத்தில் மாணவ-மாணவிகளுக்கு படிப்பதற்கு ஏற்ற வகையில் அறை தயார் செய்து கொடுக்கவும், மாணவ-மாணவிகளுக்கு எந்த குறையுமின்றி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆணையர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கும், விடுதி காப்பாளர்களுக்கும் அறிவுரை வழங்கினார். மேலும் அவர் உணவு பொருள் சேமிப்பு அறை, சமையல் செய்யும் அறை மற்றும் உணவருந்தும் கூடம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? எனவும், விடுதியில் குடிநீர், தங்கும் வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா? என்று பார்வையிட்டு, விடுதிகளில் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார்