ஆதித்தனார் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.

Update: 2022-11-03 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணிப்பொறியியல் துறை சார்பில், சர்வதேச கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். கணிப்பொறியியல் துறை தலைவர் வேலாயுதம் வரவேற்று பேசினார். சர்வதேச மென்பொருள் நிறுவனமான சுவீட்சர்லாந்தைச் சேர்ந்த டைசீன் கம்பியூட்டிங் நிறுவனரும், முதன்மை தலைமை செயல் அதிகாரியுமான பிரான்சிஸ் டேவி பான்வின் 'ரீசன்ட் கம்பியூட்டிங்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

தொடர்ந்து டைசீன் கம்பியூட்டிங் நிறுவனத்தின் இயக்குனரும், ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவருமான லிங்கசாமி மாணவர்களுடன் கலந்துரையாடினார். தற்போதைய பயன்பாட்டில் உள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கி கூறினார். பேராசிரியர்கள் பிரீத்தி, பிருந்தா, இன்பரோஜா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இணை பேராசிரியர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்