ஆதித்தனார் கல்லூரியில்கணினி அறிவியல் மன்ற தொடக்க விழா

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணினி அறிவியல் மன்ற தொடக்க விழா நடந்தது.

Update: 2023-09-08 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை (சுயநிதி பிரிவு) மன்ற தொடக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சகாய ஜெயசுதா வரவேற்று பேசினார்.

கல்லூரி முன்னாள் மாணவரும், அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் நகரில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரியுமான அருண்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், மாணவர்கள் திறன் மேம்பாடு, நேர்முக தேர்வுக்கு தயார் செய்வது குறித்து விளக்கி கூறினார். கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர் மன்ற செயலாளர் ஸ்ரீராம் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்