ஆதிகேசவபெருமாள் காவிரி கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி

கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி ஆதிகேசவபெருமாள் காவிரி கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி

Update: 2022-12-11 18:45 GMT

கார்த்திகை மாத கடைஞாயிறையொட்டி குத்தாலம் காவிரி படித்துறையில் தீர்த்தவாரி நடந்தது.சாமிகளுக்கு ஒரே நேரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் ஆதிகேசவபெருமாள் காவிரி கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அங்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

தீர்த்தவாரியையொட்டி குத்தாலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து வீதிகளும் சுத்தம் செய்யப்பட்டது. மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்