ஆழ்வார்திருநகரி கோவிலில் ஆடிசுவாதி திருவிழா:கருடாழ்வாருக்கு பாலாபிஷேகம்

ஆழ்வார்திருநகரி கோவிலில் ஆடிசுவாதி திருவிழாவை முன்னிட்டு கருடாழ்வாருக்கு பாலாபிஷேகம் நடந்தது.

Update: 2023-07-27 18:45 GMT

தென்திருப்பேரை:

தாமிரபரணி நதிக்கரையில் நவ திருப்பதிகளில் குருவுக்கு அதிபதியாக விளங்கும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆடி சுவாதி திருவிழா கடந்த 17-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் கருடனுக்கு திருமஞ்சனம், திருவாய்மொழி சேவாகாலத்துடன் நடைபெற்று வந்தது. 10-ம் திருநாளான நேற்று முன்தினம் ஆடி சுவாதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலையில் பெருமாளுக்கு கலச திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் ஏராளமான பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் கோவிலை சென்றடைந்தது. கோவில் வடக்கு மூலையில் உள்ள கருடாழ்வாருக்கு 2 ஆயிரம் லிட்டா் பால் அபிஷேகம் செயப்பட்டது. தொடா்ந்து மாவுப்பொடி, மஞ்சள், திரவியம், தயிா், பஞ்சாமிர்தம், தேன், இளநீா், சந்தனம் கொண்டு நவ கலச திருமஞ்சனம் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் 5 ஆயிரம் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னா் சுவாமிக்கு தங்ககவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து பிரபந்தகோஷ்டியாரின் திருவாய்மொழி சாற்றுமுறை நடைபெற்று தீர்த்த விநியோகம் நடைபெற்றது. விழாவில் கோவில் செயல் அலுவலர் அஜித், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கருடாழ்வாரை தாிசனம் செய்தனா்.

Tags:    

மேலும் செய்திகள்