ஆதி திராவிடர் விடுதி மாணவர்கள் போராட்டம்
ஆதி திராவிடர் விடுதி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதி திராவிடர் மாணவர் நல விடுதி மாணவர்கள் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விடுதியில் வழங்கப்படும் உணவு தரம் குறைவாக உள்ளது, அடிப்படை வசதிகள் முறையாக பராமரிப்பு இல்லை,. விடுதியில் மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலிக்கும் விடுதி காப்பாளரை கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர் விடுதி மாணவர்கள் கூறும்போது, விடுதியில் சேருவதற்கு மாணவர்களிடம் விடுதி காப்பாளர் பணம் வசூல் செய்து வருகிறார். இந்த பிரச்சினைக்கு பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.